இந்தியாவின் ஒட்டு மொத்த குரல்
Saturday, 23 March 2013
Thursday, 21 March 2013
முதல் அரியர் பீலிங் :-(
நைட்டே பசங்க இன்னக்கி ரிசல்ட் வரும்னு பீதிய கெளப்பிட்டு படுத்துடானுங்க .வெப்சைட் போய் பாத்தா results will be updated within an hour.அப்பிடின்னு அறிவிப்பு வேற நானும் பாத்துட்டே தூங்கிட்டேன்.நைட் 1 மணிக்கு திடீர்னு முழிப்பு வந்துச்சு வேக வேகமா 100106105034 டைப் பண்ணி செக் ரிசல்ட் குடுத்தேன் .ரெண்டு போச்சு ஒண்ணுமே தோனல என் friend நம்பர அடுச்சு பாத்தேன் ஆல் கிளியர் .
எங்க இருந்து வந்துச்சுன்னு தெர்ல அவ்ளோ வருத்தம் (முதல் அனுபவம்)ரூம் மேட் கிட்ட ரிசல்ட் வந்த விசயத்த கூட சொல்லாம படுத்துட்டேன் .ஒரு நாலு மணிக்கு ஒருத்தன் கதவ தட்னான் ,மச்சி ரிசல்ட் வந்துர்சுரா (பாசாயிட்டான்னு ஏற்கனவே தெரிஞ்சுக்குட்டு வந்து கத்துனான் போல ).subject code மட்டுமே போட்ருந்தனால முதல்லயே எந்தெந்த பேபர்னு பாக்கல .அப்புறம் ஹால் டிக்கெட் எடுத்து பார்த்தேன் எதிர்பார்த்த ஒன்னு ,சம்பந்தமே இல்லாம ஒண்ணுல போயிருந்துச்சு .ஒரு பத்து தடவ கண் முன்னாடி எக்ஸாம் எழுதுன கொஸ்டீன் ஓடுச்சு .பாஸ் வாய்ப்பு இருக்கானு பாத்தேன் சுத்தம் .வீட்டுக்கு சொன்னேன் பதிலே இல்லாம போன் கட்டாச்சு.
முதல்லயே படிசுர்க்கலாம்னு திடீர் நல்லவன் ஆனேன் .என் தங்கச்சிகிட்டயும் ,மாமாகிட்டயும் பேசனேன் டென்ஷன் ஆகாம இருக்க சொன்னாங்க .ஒரு வாக் போய்ட்டு குழுச்சுட்டு collage கெளம்பிட்டேன் .காலேஜ் போனா பசங்க வழக்கத்துக்கு மாறா சந்தோஷமா இருந்தானுங்க எனக்கும் கம்பெனி இருகானுங்லேன்னு ஒன்னும் தோனல .அறியர் வைக்காத மாணவன் அரை மாணவன் போன்ற தத்துவங்கள் கடந்து போயின .நாலு செமஸ்டர் முடுச்சொடன பாதி கடல் வெற்றிகரமா முடிச்ச சந்தோசத்துல இத்தனை நாள் சுத்திட்ருந்தேன் .இப்ப :(
ஆனால் நேரம் ஆக ஆக ஒரு சோகம் வந்துக்ட்டே இருந்துச்சு ,நான் பெயில் ஆனத பார்த்து உன்னோருத்தன் சந்தோசப்பட்டதும் காரணம் .(அவன் பாஸ் )வழக்கமா வர்ற 'இன்னக்கிருந்து படிக்க ஆரம்பிக்கணும்'னு தோனுச்சு .அடுத்தடுத்து staff வந்து கேவலமா பாக்கர மாறி இருந்துச்சு (ஆனா அவங்க வழக்கம் போல தான் இருந்தாங்க ) .HOD வந்தாப்ல வாஷ் அவுட் ஆனவன்லாம் வேற எதாவது வேலை பாக்கபோங்கன்னு சொல்லிட்டு கெளம்பிடாப்ள .
ஒரு வாரம் கிளாசே எழவு விழுந்த வீடு மாறி இருந்துச்சு (வழக்கமா இருக்ரதுதான் ) இப்ப ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆச்சு கொஞ்சம் கூட அந்த எண்ணமே இல்ல பாத்துக்கலாம் என்ன ஆகிறபோகுது .இனிமேல் revaluation ரிசல்ட் வரும்போது கொஞ்சம் ,ஹால் டிக்கெட்ல எட்டு எக்ஸாம் இருக்றத பாக்கும்போது வருத்தமா இருக்கும் .பரவால்ல இதுவும் ஒரு புது அனுபவம் தான் .
Subscribe to:
Comments (Atom)


.jpg)