இந்தியாவின் ஒட்டு மொத்த குரல்
வணக்கம்
Saturday, 23 March 2013
Thursday, 21 March 2013
முதல் அரியர் பீலிங் :-(
நைட்டே பசங்க இன்னக்கி ரிசல்ட் வரும்னு பீதிய கெளப்பிட்டு படுத்துடானுங்க .வெப்சைட் போய் பாத்தா results will be updated within an hour.அப்பிடின்னு அறிவிப்பு வேற நானும் பாத்துட்டே தூங்கிட்டேன்.நைட் 1 மணிக்கு திடீர்னு முழிப்பு வந்துச்சு வேக வேகமா 100106105034 டைப் பண்ணி செக் ரிசல்ட் குடுத்தேன் .ரெண்டு போச்சு ஒண்ணுமே தோனல என் friend நம்பர அடுச்சு பாத்தேன் ஆல் கிளியர் .
எங்க இருந்து வந்துச்சுன்னு தெர்ல அவ்ளோ வருத்தம் (முதல் அனுபவம்)ரூம் மேட் கிட்ட ரிசல்ட் வந்த விசயத்த கூட சொல்லாம படுத்துட்டேன் .ஒரு நாலு மணிக்கு ஒருத்தன் கதவ தட்னான் ,மச்சி ரிசல்ட் வந்துர்சுரா (பாசாயிட்டான்னு ஏற்கனவே தெரிஞ்சுக்குட்டு வந்து கத்துனான் போல ).subject code மட்டுமே போட்ருந்தனால முதல்லயே எந்தெந்த பேபர்னு பாக்கல .அப்புறம் ஹால் டிக்கெட் எடுத்து பார்த்தேன் எதிர்பார்த்த ஒன்னு ,சம்பந்தமே இல்லாம ஒண்ணுல போயிருந்துச்சு .ஒரு பத்து தடவ கண் முன்னாடி எக்ஸாம் எழுதுன கொஸ்டீன் ஓடுச்சு .பாஸ் வாய்ப்பு இருக்கானு பாத்தேன் சுத்தம் .வீட்டுக்கு சொன்னேன் பதிலே இல்லாம போன் கட்டாச்சு.
முதல்லயே படிசுர்க்கலாம்னு திடீர் நல்லவன் ஆனேன் .என் தங்கச்சிகிட்டயும் ,மாமாகிட்டயும் பேசனேன் டென்ஷன் ஆகாம இருக்க சொன்னாங்க .ஒரு வாக் போய்ட்டு குழுச்சுட்டு collage கெளம்பிட்டேன் .காலேஜ் போனா பசங்க வழக்கத்துக்கு மாறா சந்தோஷமா இருந்தானுங்க எனக்கும் கம்பெனி இருகானுங்லேன்னு ஒன்னும் தோனல .அறியர் வைக்காத மாணவன் அரை மாணவன் போன்ற தத்துவங்கள் கடந்து போயின .நாலு செமஸ்டர் முடுச்சொடன பாதி கடல் வெற்றிகரமா முடிச்ச சந்தோசத்துல இத்தனை நாள் சுத்திட்ருந்தேன் .இப்ப :(
ஆனால் நேரம் ஆக ஆக ஒரு சோகம் வந்துக்ட்டே இருந்துச்சு ,நான் பெயில் ஆனத பார்த்து உன்னோருத்தன் சந்தோசப்பட்டதும் காரணம் .(அவன் பாஸ் )வழக்கமா வர்ற 'இன்னக்கிருந்து படிக்க ஆரம்பிக்கணும்'னு தோனுச்சு .அடுத்தடுத்து staff வந்து கேவலமா பாக்கர மாறி இருந்துச்சு (ஆனா அவங்க வழக்கம் போல தான் இருந்தாங்க ) .HOD வந்தாப்ல வாஷ் அவுட் ஆனவன்லாம் வேற எதாவது வேலை பாக்கபோங்கன்னு சொல்லிட்டு கெளம்பிடாப்ள .
ஒரு வாரம் கிளாசே எழவு விழுந்த வீடு மாறி இருந்துச்சு (வழக்கமா இருக்ரதுதான் ) இப்ப ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆச்சு கொஞ்சம் கூட அந்த எண்ணமே இல்ல பாத்துக்கலாம் என்ன ஆகிறபோகுது .இனிமேல் revaluation ரிசல்ட் வரும்போது கொஞ்சம் ,ஹால் டிக்கெட்ல எட்டு எக்ஸாம் இருக்றத பாக்கும்போது வருத்தமா இருக்கும் .பரவால்ல இதுவும் ஒரு புது அனுபவம் தான் .
Thursday, 27 December 2012
நீ தானே என் பொன் வசந்தம் (சத்தியமா இது சினிமா விமர்சனம் இலீங்கோ )
நேற்று ஒரு நிலத்திற்கு அட்வான்ஸ் வாங்கியதால் எனது அப்பா கொஞ்சம் சந்தோஷமாக இருந்தார் .சரி எதாவது படத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.மற்ற படங்கள் அனைத்தையும் ஏற்கனவே பார்த்திருந்ததால் NEPV போகலாம் என தீர்மானித்தோம் .ஆரம்பித்த சிறிது நேரம் பாட்டாகவே ஓடிக்கொண்டிருந்தது .என் அப்பா அவ அவ்ளோ அழகு என்ற டயலாக் கேட்ட உடனேயே இண்டர்வளோட கெளம்புறேன் என்று சொல்லிவிட்டார் ..ஆனால் ஸ்கூல் பிளாஷ் பேக்கிலிருந்து நான் படத்துடன் ஒன்றியிருந்தேன் மிக யதார்த்தமான பேச்சுக்கள்...அதுவும் நீ ஊட்டி போனதே இல்லையா .. போனதே இல்லையா ..இப்ப வரைக்கும் ஸ்கூல் பசங்க இந்த சிச்சுவேஷன்ல இதே போன்றே பேசுகின்றனர் ..சமந்தா நான் ஈயில் பார்த்ததற்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தார் ..அந்த சிறுபிள்ளைதனமான பேச்சுக்கள் இன்னும் பார்க்க அவ்ளோ அழகு ... லிப் லாக் உள்ளது எப்போது வந்து தொலைக்குமோ என்ற பயம் வேறு ..இண்டர்வெலுக்கு பிறகு வர வேண்டுமென நினைத்து கொண்டேன் ..வேண்டுதல் வீன்போனது ...
பள்ளி பருவத்தில் வரும் ஈகோவே அழகாகவும் எதார்த்தமாகவும் உள்ளது.அப்பொழுது சமந்தா சூழ்நிலை காரணமாக ஜீவாவை விலகியிருந்த போதிலும் ஜீவா அந்த வயதுக்குண்டான கோபத்துடன் செல்வது சரி ஒத்துக்கொள்ளலாம் ..ஆனால் அதன் பிறகு ஜீவாவின் நடவடிக்கை அனைத்தும் வில்லன் இல்லாத குறையை சரி செய்வது போலேயே அம்மைந்துள்ளது ..சமந்தா i love u கூறிய பிறகும் .பதில் சொல்லாமல் முத்தமிட்டு சொல்லிட்டேன்ல என கூறுவது வழிசல் ...அதன் பிறகு சமந்தா உண்மையாக ஜீவாவை காதலிக்கிறார்.ஆனால் ஜீவா காதல் செய்வது அவ்வளவு ஒட்டவில்லை.சரி வீட்டு நிலமைக்காக
படிக்கிறார் ஆனால் அதற்காக சமந்தாவை வெறுப்பது சத்தியமா theatreஅ விட்டு எண்துர்சு வந்துர்லாம்னே இருந்தேன்...நல்லவேளை இண்டர்வல் விட்டு அப்பா கெளம்பிட்டார் ..
அதன் பின்பு ஜீவா மன்னிப்பு கேட்க செல்கிறார் ,ஆனால் அங்கு சென்றும் ஈகோ பார்த்து ஓடி வருவது ஆணாதிக்கம் ...அதன் பின்பு கல்யாணம் வரை செய்ய முடிவெடுப்பது பழி வாங்கும் செயல்தான் செம காண்டுங்க ஒரு பொண்ணு அவ்ளோ நாள் வெயிட் பண்ணும்போது இவன்னுக்கெல்லாம் என்ன வந்துச்சு ...இன்னக்கி விகடன் வ.பா ல ஒரு ட்விட் படிச்சேன் ''ஒரு ஆண் தன்னை விட்டு போகமாடன்னு தெரிஞ்சு இவளுக செய்ற அட்டகாசம் இருக்கே அம்மம்மா ...அப்பப்பா ''ஆனா இதுல அப்டியே நேர் opposite ..ஏற்கனவே சந்துல நெறைய பேர் சொல்லிருக்காங்க ஆனா ரொம்பவே ஓவர்.. (ச்ச செந்தமிழ்ல எழுதலாம்னு பாத்தா முடியமாட்டேன்குது).அதுவும் கிளைமாக்ஸ்க்கு ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடிலாம் போயிர்லான்க்ர அளவுக்கு ஓவரா பிகு பண்றார் ஜீவா ..ஆனா அதுனாலதான் படத்துல emotion கூடுது ..கிளைமாக்ஸ் ஹ்ம்ம் பரவால்ல கொஞ்சம் சந்தோஷபட்றாப்டி முடிஞ்சுச்சு ...
ஆனா இப்ப வரைக்கும் படம் பாத்தப்ப இருந்த ஒரு வெறுமை இப்ப வரைக்கும் இருக்கு ...போஸ்டர்ல இருக்கறமாரி லவ் பண்ணவங்க ,பண்றவங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.ரொம்பையும் மொக்க இல்ல ஏற்கனவே சொன்ன மாறி இது விமர்சனம் இல்ல.ஒவ்வொரு கேரக்டரும் எனக்கு குடுத்த உணர்வ சொல்லிருக்கேன் அவ்ளோதான் ..
Subscribe to:
Comments (Atom)


.jpg)

